நோன்புப் பெருநாள் விடுமுறை - உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: CNA/Ooi Boon Keong)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அதுகுறித்து குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் (ICA) Facebook பக்கத்தில் தகவல் வெளியிட்டது.
மார்ச் 28ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று ஆணையம் சொன்னது.
இதனால் பயணிகள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிவரலாம் என்றும் அது கூறியது.
எல்லையைக் கடக்க பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து அவர்கள் யோசிக்கலாம் என்றும் ஆணையம் ஆலோசனை கூறியது.
அண்மையில் மார்ச் 14ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரை பள்ளி விடுமுறையின்போது 5.6 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்தனர்.
குறிப்பாக மார்ச் 17ஆம் தேதி இரு சோதனைச் சாவடிகளையும் கடந்தோர் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது. அந்த ஒரு நாளில் 550,000 பேர் இரு சோதனைச்சாவடிகளையும் கடந்தனர். வாகனமோட்டிகள் 3 மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது.

ஆதாரம் : Others