Skip to main content
போக்குவரத்துக் குற்றங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

போக்குவரத்துக் குற்றங்கள் - 6% உயர்வு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் போக்குவரத்துக் குற்றங்கள் 6 விழுக்காடு கூடியுள்ளன.  மொத்தம் 55,044 போக்குவரத்துக் குற்றச் சம்பவங்கள் பதிவானதாகத் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா சண்முகம் தெரிவித்தார். ஒப்புநோக்க 2025இன் அதே காலக்கட்டத்தில் 51,944 போக்குவரத்துக் குற்றச் சம்பவங்கள் பதிவாகின. ஜனவரி முதல் பிப்ரவரி வரை ஆக அதிகமாகப் பதிவான போக்குவரத்துக் குற்றங்கள்: 1. வேக வரம்பை மீறுதல்:
    2026 - 42,498 சம்பவங்கள்
    2025 - 34,918 சம்பவங்கள் 2. சிவப்பு விளக்கை மீறிச் செல்லுதல்:
    2026 - 2,724 சம்பவங்கள்
    2025 - 3,890 சம்பவங்கள் 3. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல்:
    2026 - 1,504 சம்பவங்கள்
    2025 - 3,901 சம்பவங்கள் மார்ச் மாத நிலவரம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றார் அமைச்சர் சண்முகம். இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் பதிவான போக்குவரத்துக் குற்றங்கள் பற்றி புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்குத் திரு சண்முகம் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்