Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சாலைத்தடுப்பைத் தவிர்க்க முயன்ற இளையரை மடக்கிப் பிடித்த அதிகாரிகள்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் சாலைத்தடுப்புச் சோதனையை மீற முயன்ற
19 வயது இளையரைப் போக்குவரத்துக் காவல்துறை
அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

8 World செய்தித்தளம் அந்த விவரத்தைத் தந்தது.

அந்தச் சம்பவம் நேற்று (3 ஜனவரி) இரவு 11.25 மணிக்கு நடந்ததாகக் காவல்துறை 8 World-இடம் கூறியது.

சாலைத்தடுப்பு லவெண்டர் (Lavender) ஸ்ட்ரீட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.

அப்போது மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் நிறுத்தாமல் சென்றார்.

காவல்துறை அதிகாரிகள் அவரைச் சிறிதுநேரம் பின்தொடர்ந்து பிறகு பிடித்தனர்.

அந்த நேரத்தில் அதிகாரி ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது.

அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

19 வயது ஓட்டுநர் சாலைத்தடுப்பைத் தவிர்க்க முயன்ற குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டார்.

அவர் போதைப்பொருள் குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது சுயநினைவோடு இருந்தார்.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : Others/8 World

மேலும் செய்திகள் கட்டுரைகள்