Skip to main content
2020ஆம் ஆண்டைவிட 2021இல் அதிகரித்துள்ள சாலை விபத்துகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

2020ஆம் ஆண்டைவிட 2021இல் அதிகரித்துள்ள சாலை விபத்துகள்

வாசிப்புநேரம் -

சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு, அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் அதிகரித்திருந்தது.

ஆனால் நோய்ப்பரவல் காலத்துக்கு முன்பிருந்ததைவிட அது குறைவு.

நோய்ப்பரவல் ஆரம்பித்த 2020ஆம் ஆண்டைக் காட்டிலும் சென்ற ஆண்டு மேலும் அதிகமான நடவடிக்கைகளும் நடமாட்டமும் இடம்பெற்றன.

கடந்த ஆண்டு வயதான பாதசாரிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தன.

ஆயினும் வயதான பாதசாரிகள், மோட்டார் சைக்கிளோட்டிகள் தொடர்ந்து அக்கறைக்குரிய பிரிவினராகவே உள்ளனர்.

இந்நிலையில், மரணத்தை ஏற்படுத்திய சாலை விபத்துகளின் எண்ணிகையும் சாலை விபத்துகளில் மாண்டோர் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு அதிகரித்தன.

மரணத்தை ஏற்படுத்திய சாலை விபத்துகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 25 விழுக்காடு கூடியது.

சாலை விபத்துகளில் மாண்டோர் எண்ணிக்கை சுமார் 30 விழுக்காடு அதிகரித்தது.

சென்ற ஆண்டு 107 பேர் சாலை விபத்துகளில் மாண்டனர்.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

மேலும் செய்திகள் கட்டுரைகள்