Skip to main content
Defu தொழிற்பேட்டையில் விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Defu தொழிற்பேட்டையில் விபத்து - சைக்கிளோட்டி மரணம், லாரி ஓட்டுநர் கைது

வாசிப்புநேரம் -
Defu தொழிற்பேட்டையில் விபத்து - சைக்கிளோட்டி மரணம், லாரி ஓட்டுநர் கைது

(படம்: Google Maps)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

டேஃபு (Defu) தொழிற்பேட்டையில் கவனமின்றி வாகனம் ஓட்டி மரணம் விளைவித்த சந்தேகத்தில் 43 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று டேஃபு அவென்யூ 1,டேஃபு லேன் 7 சந்திப்பில் விபத்து நடந்தது.

சைக்கிளும் கனரக லாரியும் விபத்தில் சிக்கின.

காலை 10.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

சைக்கிளோட்டிய 62 வயதுப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் செல்லும் முன்பே லாரி ஓட்டுநர் அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்