அக்டோபர் 15இலிருந்து புதிய வங்கி நடைமுறை - கணக்கிலிருந்து பாதிக்கு மேற்பட்ட தொகை எடுக்கப்படுவதைத் தடுக்கலாம்
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அக்டோபர் 15ஆம் தேதியிலிருந்து வங்கிக் கணக்கிலிருந்து பாதிக்கும் மேற்பட்ட தொகை எடுக்கப்படுவதை அல்லது மாற்றிவிடப்படுவதை வங்கிகளால் தடுக்க இயலும்.
குறைந்தது 50,000 வெள்ளி இருக்கும் கணக்குகளுக்கு இந்த நடவடிக்கை பொருந்தும்.
24 மணி நேரத்தில், ஒரு முறை அல்லது அதற்கும் மேல் பரிவர்த்தனைகள் செய்யும்போது கணக்கில் உள்ள பணத்தில் பாதிக்கும் மேல் நகர்த்தப்படுவது தெரிந்தால் வங்கி நிர்வாகம் உடனே பரிவர்த்தனையை நிறுத்தலாம்.
DBS, OCBC, UOB, Citibank, HSBC, Maybank, Standard Chartered ஆகிய வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு இது பொருந்தும்.
இணையம் வழி நடக்கும் பரிவர்த்தனைகள் மட்டும் இவ்வாறு கவனிக்கப்படும். தானியக்க வங்கி இயந்திரம் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளுக்குப் புதிய நடவடிக்கை பொருந்தாது.
புதிய நடவடிக்கை நடப்புக்கு வருவதால் இணைய வங்கி நடவடிக்கைகளில் தடங்கல் ஏற்படலாம் என்று சிங்கப்பூர் வங்கிச் சங்கம் கூறியிருக்கிறது.
செய்யவேண்டிய பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது சிறந்தது என்று சங்கம் ஆலோசனை வழங்கியது.

ஆதாரம் : CNA