Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

மீண்டும் வெளிநாட்டுப் பயணம்...அனுபவம் புதுமை

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரிலும் மற்ற நாடுகளிலும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள வேளையில், ஈராண்டுக்குப் பின் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளப் பலர் ஆவலுடன் இருக்கின்றனர்.

சிலர் சிங்கப்பூருக்கு அருகில் உள்ள நாடுகளுக்குச் சென்றுவந்துள்ளனர்.

அவர்களின் பயண அனுபவங்கள் எவ்வாறு இருந்தன?

 

மலேசியா

ஈராண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார் கார்த்திகா (Karthika).

எடுத்தவுடன் தொலைதூரத்தில் இருக்கும் நாடுகளுக்குச் செல்ல அவர் விரும்பவில்லை.

மேலும், அவருக்குப் பிடித்த நாடான தென்கொரியா இன்னமும் திறக்கவில்லை.

அதனால் நீண்ட வார இறுதியில் அண்டை நாடான மலேசியாவிற்கு ஒரு குட்டிப் பயணம் செய்தார் அவர்.

ஜொகூர் பாருவில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நண்பர்களுடன் பத்து மலைக்குச் சென்று நன்றாக நேரத்தைக் கழித்தார் கார்த்திகா.

 

பாலி

இந்தோனேசியாவின் பாலித் தீவு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

அங்குச் செல்வதில் எதிர்பாராத சவால்களைச் சந்தித்தார் லாவணியா பிரியா (Lavania Priya).

சிங்கப்பூரிலிருந்து கிளம்புவதற்கு முன் தமது குழந்தைக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் பயணத்துக்கு முந்திய பரிசோதனை மேற்கொள்ளும்போது சில சிக்கல்கள் ஏற்பட்டன.

ஆனால் இறுதியில் எல்லாச் சவால்களையும் கடந்து குழந்தையுடன் பயணம் மேற்கொண்டார் அவர்.

விடுமுறையாகத் தொடங்கிய பயணம், தாய்-மகன் ஆகியோருக்கான ஆடம்பர ஆடைகளை வடிவமைக்கும் பயணமாக மாறியது.

Instagramஇல் லாவணியாவின் ரசிகர்களில் பெரும்பாலோர் அன்னையர்.

அவர் தயாரிக்கும் ஆடைகளை வாங்க தினமும் பலர் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

பாலித் தீவில் உள்ள நிம்மதியான வாழ்க்கைமுறை, அழகான காட்சிகள், விதவிதமான உணவகங்கள் ஆகிய அனுபவங்களில் திளைத்துக்கொண்டிருக்கிறார் லாவணியா.

 

வியட்நாம்

படம்: NHAC NGUYEN/AFP

நீண்ட வார இறுதியில் வியட்நாம் தலைநகர் ஹனோய்க்குப் (Hanoi) பயணம் மேற்கொண்டார் பெயர் குறிப்பிட விரும்பாத செய்தி வாசகர்.

சிங்கப்பூருக்கு அருகில் இருப்பதாலும் பயணக் கட்டுப்பாடுகள் இல்லை என்பதாலும் அவரின் பயணம் சுமுகமாக இருந்தது.

ஒரே வருத்தம்....சைவ உணவு சாப்பிடும் அவருக்கு பீட்சா, நூடல்ஸ் ஆகியவை மட்டுமே கிடைத்தன!

இருப்பினும் அந்த அழகான இடத்தை நண்பர்களுடன் சுற்றிப் பார்த்ததில் அவர் மகிழ்ச்சியடைகிறார்.

 

இந்தியா

இந்தியாவை வாட்டும் கடும் வெப்பநிலை காரணமாக அங்குள்ள அழகான இடங்களைச் சுற்றிப்பார்ப்பது சற்றுக் கடினமாக இருக்கலாம்.

வெப்பத்தில் ஏன் வாடிவதங்கவேண்டும்? இருக்கவே இருக்கின்றன ஊட்டி (Ooty) போன்ற சில்லென்ற இடங்கள்!

இந்தியாவில் உள்ள மலைப்பகுதிகளில் ஊட்டியே சிறந்தது என்று கருதப்படுகிறது.

புதிதாகத் திருமணமான ஜாஸ்லின் (Jaslin) தமது கணவரின் குடும்பத்துடனும் தாயாருடனும் அங்குப் பயணம் மேற்கொண்டார்.

திரைப்படங்களில் பொதுவாக இந்தியாவின் நெரிசலான தெருக்கள் அதிகம் இடம்பெறும்.

இந்தியாவின் அழகான மறுபக்கத்தைக் காட்ட தமது தாயாரை ஊட்டிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறினார் ஜாஸ்லின்.

 

தாய்லந்து

தாய்லந்தின் புக்கெட் (Phuket) உல்லாசத் தலத்துக்குத் தனியாகப் பயணம் மேற்கொண்டார் சுஜிதா (Sujitha).

இதற்கு முன் தாய்லந்துக்குச் செல்லாத அவருக்கு அது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.

ஆரம்பத்தில் சற்றுத் தயக்கம்...ஆனால் அதுவே அவரின் சிறந்த பயண அனுபவமாக அமைந்தது.

4 நாள்களுக்கு மட்டுமே பயணம்....ஆனால் பார்த்த இடங்களோ ஏராளம்.

பிரபல புத்தர் சிலை, Phi Phi தீவு, ஜேம்ஸ் பாண்ட் (James Bond) தீவு ஆகிய இடங்கள் அவற்றில் சில.

தனியாக நேரத்தைக் கழித்ததில் மகிழ்ச்சி அடைந்த சுஜிதா சென்ற இடங்களிலெல்லாம் இயற்கை அழகைக் கண்டு ரசித்தார்.

உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து விடுமுறைக்காகப் பயணம் செய்தவர்களுடன் நல்ல நட்பையும் வளர்த்துக்கொண்டார் அவர்.

இவர்களின் பயணக் கதைகளைப் படித்து உங்களுக்கும் வெளிநாடு செல்ல ஆசை வந்துள்ளதா? உங்கள் பயணங்களைத் திட்டமிடத் தொடங்குங்கள்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்