"இந்தியச் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து உதவ வேண்டும்"
This audio is generated by an AI tool.
இந்தியச் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்குக் கைகொடுக்குமாறு மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை கேட்டுக்கொண்டுள்ளார்.
வெவ்வேறு சமூகங்களுக்கு இடையில் பிணைப்பை வலுப்படுத்த வேண்டும்.
சிங்கப்பூரை அடுத்தக்கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல இந்தியச் சமூகத்தில் அடுத்தத் தலைமுறைத் தலைவர்களை அடையாளங்காணவேண்டும் என்று திரு முரளி கேட்டுக்கொண்டார்.
தமிழர் பேரவை நடத்திய கல்வி உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
தமிழர் பேரவை 158 மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதியை வழங்கியுள்ளது.
ஒவ்வொருவருக்கும் 300 வெள்ளி முதல் 500 வெள்ளி வரையிலான நிதி வழங்கப்பட்டது.
இளையர்களுக்குக் குறிப்பாகக் கல்வியில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்குத் தமிழர் பேரவை கைகொடுக்கிறது.
அது கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 5,500 மாணவர்களுக்குச் சுமார் 500,000 வெள்ளி சமூகக் கல்வி உதவி நிதியை வழங்கியிருக்கிறது.