நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு ஓங் ஆ ஹெங் காலமானார்
வாசிப்புநேரம் -
படம்: FB/K Shanmugam Sc, ComfortDelGro
மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு ஓங் ஆ ஹெங் (Ong Ah Heng) காலமானார்.
அவருக்கு 84 வயது.
நேற்று முன்தினம் (5 மே) அவர் காலமானார்.
திரு ஓங் 1997ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை நீ சூன் சென்ட்ரல் (Nee Soon Central) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்தார்.
2011ஆம் ஆண்டு அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெற்றார்.
அவரின் மறைவுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அவரது மறைவு மிகுந்த வருத்தம் அளிப்பதாக பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) தெரிவித்தார்.
திரு ஓங் தமது வாழ்க்கையைச் சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் சேவை செய்ய அர்ப்பணித்ததாக அவர் சொன்னார்.
திரு ஓங் அமைதியான சேவை மனப்பான்மை கொண்டவர் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் (K Shanmugam) தெரிவித்தார்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் நலனுக்கும் உழைப்பின் மரியாதைக்கும் திரு ஓங் குரல் கொடுத்ததாக வடமேற்கு வட்டார மேயர் திரு அலெக்ஸ் யாம் (Alex Yam) கூறினார்.
சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு ஆண்களும் பெண்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் திரு ஓங் எப்போதும் வேரூன்றியிருந்ததாகவும் அவர் விவரித்தார்.

ஆதாரம் : CNA