Skip to main content
துவாஸ் கப்பல் பட்டறையில் 24 வயது ஊழியர் மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

துவாஸ் கப்பல் பட்டறையில் 24 வயது ஊழியர் மரணம்

வாசிப்புநேரம் -
துவாஸ் கப்பல் பட்டறையில் 24 வயது ஊழியர் மரணம்

கோப்புப் படம்: Seatrium

வெளியீடு : 09 Apr 2026 10:09AM புதுப்பிப்பு : 09 Apr 2026 11:30AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

துவாஸ் சௌத் பொலிவார்டில் (South Boulevard) உள்ள கப்பல் பட்டறையில் 24 வயது ஊழியர் மாண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்திருக்கிறது. 

சம்பவம் இம்மாதம் 6ஆம் தேதி நடந்தது. 

கப்பலுக்கு உள்ளே இருக்கும் ஓர் எஃகு குழாய்க்குள் அவர் சுயநினைவின்றிக் காணப்பட்டார். 

அந்த 71 செண்டிமீட்டர் அகலமுள்ள குழாயிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அவர் மாண்டதை மருத்துவ உதவியாளர்கள் உறுதிசெய்தனர்.

அவர் பத்திரிவைக்கும் பணியைச் செய்பவர் என்று கூறப்பட்டது. 

ஊழியர் Hwa Leong Offshore Engineering நிறுவனத்தைச் சேர்ந்தவர். 

அந்தப் பட்டறையில் Seatrium நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது. விசாரணை தொடர்கிறது.

எந்தப் பணியையும் தொடங்குவதற்கு முன்னர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று மனிதவள அமைச்சு வலியுறுத்தியது. குறிப்பாக, இடர்களைக் கண்டறிய வேண்டும் என்று அது சொன்னது.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்