துவாஸில் மின்சிகரெட் கடத்திவர முயன்ற மலேசியர் கைது
வாசிப்புநேரம் -
(படம்: Facebook / Immigration & Checkpoints Authority)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட லாரியில் சிங்கப்பூருக்குள் மின்சிகரெட்டுகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் ஆகஸ்ட் 20ஆம் தேதி துவாஸ் சோதனைச்சாவடியில் நடந்தது.
குடிநுழைவுச் சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரி ஒருவர் லாரியைச் சோதித்தார்.
சோதித்தபோது கருவியில் பதிவான படத்தில் வழக்கத்திற்கு மாறான பகுதிகளைக் கண்டார்.
இதையடுத்து லாரி கூடுதல் சோதனைக்கு அனுப்பப்பட்டது.
அப்போது 3,400க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளும் கிட்டத்தட்ட 7,000 மின்சிகரெட் கலன்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
அவை லாரியிலிருந்த பொருள்களுடன் சேர்த்து மறைத்துவைக்கப்பட்டிருந்தன.
48 வயது மலேசிய ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.
விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : Mediacorp Seithi