Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

காசநோய்ப் பரிசோதனை... நீண்டகால அனுமதி பெற்றவர்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் நடத்தப்படுகிறதா?

வாசிப்புநேரம் -
காசநோய்ப் பரிசோதனை... நீண்டகால அனுமதி பெற்றவர்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் நடத்தப்படுகிறதா?
படம்: Envato Elements
குறுகிய காலத்துக்குச் சிங்கப்பூருக்கு வருவோரிடம் காசநோய் சோதனை நடத்தத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் கூறியுள்ளார்.

காசநோய் சிங்கப்பூரிலும் வட்டாரத்திலும் நிரந்தர நோயாகக் கருதப்படுவதால் குறுநாட்டுக்குள் நுழையும் அனைவரையும் சோதிப்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல என்று அவர் விளக்கினார்.

மேலும் அவ்வாறு அடிக்கடி சோதனை செய்வது சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வருவதைத் தடுப்பதற்குச் சமம் என்று அவர் குறிப்பிட்டார்.

நீண்டகால அனுமதி விண்ணப்பதாரர்கள், குறிப்பாக வேலை அனுமதி விண்ணப்பதாரர்கள் ஊடுகதிர்ச் சோதனையை (X-ray) மேற்கொள்ளவேண்டும்.

இந்தத் தகவலைத் திரு ஓங் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

மன்ற உறுப்பினர் யிப் ஹொன் வெங் (Yip Hon Weng) கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

அண்மையில் காசநோய் பரவத் தொடங்கியதையொட்டி அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

காசநோய் தொற்றியவர்கள் கட்டாயம் சிகிச்சை பெறவேண்டும்; சரியான சிகிச்சை வழங்கினால் எளிதில் குணமடையலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு BCG தடுப்பூசி போட்டால் 15 ஆண்டுவரை காசநோயை எதிர்க்கும் சக்தி அவர்களுக்கு இருக்கும் என்றும் திரு ஓங் எடுத்துரைத்தார்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்