Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வகுப்பின்போது மாணவி மானபங்கம் - துணைப்பாட ஆசிரியருக்குச் சிறை

வாசிப்புநேரம் -

வீட்டில் வகுப்பின்போது மாணவியை மானபங்கம் செய்த துணைப்பாட ஆசிரியருக்கு 6 வாரச் சிறைத்தண்டனையும் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

39 வயது யூ யாப் ஹோன் (Yew Yap Hon) மானபங்கம் செய்த இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

மூன்றாவதாக ஒரு குற்றச்சாட்டு கருத்தில் கொள்ளப்பட்டது.

சென்ற ஆண்டு (2023) அக்டோபர் 7ஆம் தேதி சம்பவம் நடந்தது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு அப்போது 18 வயது.

வகுப்புகளுக்குத் தனது வீட்டிற்கு வருமாறு யூ அந்த மாணவியிடம் சொன்னார்.

யூ தனது வீட்டில் வகுப்பின்போது மாணவியை மானபங்கம் செய்தார்.

மானபங்கம் செய்த குற்றத்திற்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுச் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது இவற்றில் சில விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்