Skip to main content
"ஒதுங்க விரும்பவில்லை"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"ஒதுங்க விரும்பவில்லை"

வாசிப்புநேரம் -
"ஒதுங்க விரும்பவில்லை"

CNA/Alyssa Tan

வெளியீடு : 03 Jun 2026 09:44AM புதுப்பிப்பு : 03 Jun 2026 01:00PM

அனைத்துலக ஒழுங்குமுறை நிச்சயமற்றதாக இருந்தாலும் எதையும் மாற்ற முடியாது என்று ஒதுங்கிக்கொள்ளும் மனப்பான்மையைத் துருக்கியேவும் சிங்கப்பூரும் கொண்டிருக்கவில்லை.

சிங்கப்பூருக்கு வந்திருக்கும் துருக்கியேவின் வெளியுறவு அமைச்சர் ஹாகன் ஃபிடான் (Hakan Fidan) அவ்வாறு கூறினார்.

அத்தகைய மனப்பான்மையை நிராகரிக்கும் விவேகமுள்ள, பொறுப்பான நாடுகளில் துருக்கியேவும் சிங்கப்பூரும் அடங்குவதாகத் திரு ஃபிடான் சொன்னார்.

மாறாக இருநாடுகளும் அரசதந்திர முயற்சிகளில் துடிப்புடன் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.

துருக்கியேவும் சிங்கப்பூரும் வட்டார அளவில் சேர்ந்து செயல்படுவதாகவும்  அவர் சொன்னார்.

அந்த வகையில் துருக்கியேவும் சிங்கப்பூரும் ஒரே அணுகுமுறை கொண்டிருப்பதாகத் திரு Fidan சொன்னார்.

அனைத்துலக உத்தி ஆய்வுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்