Skip to main content
சிங்கப்பூர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் -துருக்கியே உறவு மறுவுறுதி

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் -துருக்கியே உறவு மறுவுறுதி

(படம்: துருக்கியே வெளியுறவு அமைச்சு)

வெளியீடு : 03 Jun 2026 10:27AM புதுப்பிப்பு : 03 Jun 2026 01:18PM

சிங்கப்பூருக்கும் துருக்கியேவுக்கும் இடையிலான நீண்டகால உறவு மறுவுறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துருக்கியேவின் வெளியுறவு அமைச்சர் ஹாகன் ஃபிடான் (Hakan Fidan) சிங்கப்பூருக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார்.

பயணத்தின்போது அவர் பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் (Lawrence Wong) சந்தித்தார்.

இருவரும் இருநாட்டின் நீண்டகால உறவை மறுவுறுதிப்படுத்தினர்.

சிங்கப்பூருடனும் வட்டாரத்துடனும் ஒத்துழைப்பை அதிகரிக்கும் துருக்கியேவின் விருப்பத்தைத் திரு வோங் வரவேற்றார்.

திரு ஃபிடான் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனையும் (Vivian Balakrishnan) சந்தித்தார்.

உணவுப் பாதுகாப்பு, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி உள்ளிட்ட அம்சங்களில் கூட்டு முயற்சியை அதிகரிக்கும் வழிகளை அவர்கள் கலந்துரையாடினர்.

திரு ஃபிடான், உள்துறை அமைச்சர் கா. சண்முகத்தையும் (K Shanmugam) சந்தித்தார்.

பலதரப்பு ஒத்துழைப்பைக் கட்டிக்காப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் மறுவுறுதிப்படுத்தினர்.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்