Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சீன யுவான் பணம் அனுப்பும் 2 நிறுவனங்களுக்கு $5.36 மில்லியன் அபராதம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பணம் அனுப்பும் 2 நிறுவனங்களுக்கு 5.36 மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு விதிக்கக்கூடிய சீன யுவான் நாணய விகிதம் குறித்துத் தகவல் பரிமாறிக் கொண்டதற்காக அந்த அபராதம் விதிக்கப்பட்டது.

ZGR Global மற்றும் Hanshan Money Express ஆகிய அந்த 2 நிறுவனங்களும் - 6 ஆண்டுகளாக அவ்வாறு தகவல் பரிமாறிக் கொண்டன.

அவ்வாறு செய்ததால் இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்குப் போட்டித்தன்மையான விகிதங்களை வழங்கத் தேவையில்லாமல் போனது என்று சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் (Competition and Consumer Commission of Singapore - CCCS) கூறியது.

ZGR Globalஉக்கு 2.79 மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

Hanshan Money Expressஉக்கு 2.57 மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. விரைவாக வழக்குகளைத் தீர்க்கும் ஆணையத்தின் நடைமுறைக்கு ஒப்புக்கொண்டதால் அந்நிறுவனத்துக்கு அபராதத் தொகை 10 விழுக்காடு குறைக்கப்பட்டது.

விசாரணையில் ஒத்துழைத்ததால் இரண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட சலுகைக்குக் கூடுதலாக அந்தக் கழிவு அளிக்கப்பட்டது.

அக்டோபர் முதல் தேதிக்குள் இரு நிறுவனங்களும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்