Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டங்களில் இரண்டு புதிய இயக்கங்கள் அறிமுகமாகவுள்ளன

வாசிப்புநேரம் -
இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டங்களின்
ஒருபகுதியாக இரண்டு புதிய இயக்கங்கள் அறிமுகமாகின்றன.

தன்னார்வத்துடன் தொண்டூழியம் புரிவதில் சிங்கப்பூரர்களை ஊக்குவிப்பது அவற்றின் நோக்கம்.

#GiveAsOneSG மற்றும் #UniteAsOneSG என்று அழைக்கப்படும் இரண்டு இயக்கங்கள் கிட்டத்தட்ட நாற்பது சமூகப் பங்காளிகளை உள்ளடக்குகின்றன.

SG Cares செயலி மூலம் தொண்டூழியம் செய்வதற்கான ஆர்வத்தை மக்கள் பதிவு செய்யலாம்.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து சமூகத்தினர் செயலாற்றுவதற்குச் செயல்பாடுகள் வகைசெய்யும்.

ஒன்றுபட்ட தேசமாக முன்னேறிச் செல்வோம் என்ற இந்த ஆண்டின் தேசிய தினக் கருப்பொருளை மையமாகக் கொண்டு இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஹலிமா யாக்கோப் இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தொண்டூழியம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார் அவர்.

அது சிங்கப்பூரின் சமூகச் சூழலில் இன்றியமையாத அங்கமாகியுள்ளதையும் அதிபர் ஹலிமா சுட்டினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்