Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உக்ரேனியப் பொருளியல் இவ்வாண்டு 35 விழுக்காடு வரை சுருங்கலாம்

வாசிப்புநேரம் -
உக்ரேனியப் பொருளியல் இவ்வாண்டு 35 விழுக்காடு வரை சுருங்கலாம்

படம்: AP Photo/Natacha Pisarenko
ரஷ்யத் தாக்குதல்களில் உடைந்தது கண்ணாடிச் சன்னல்கள் மட்டுமல்ல...

உக்ரேனியப் பொருளியல் இவ்வாண்டு 35 விழுக்காடுவரை சுருங்குமென எதிர்பார்ப்பதாக
உலக வங்கி தெரிவித்துள்ளது. 

போரால் அங்கே 14 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளதாக வங்கி மதிப்பிட்டது. 

உற்பத்தித்திறன் அழிவு, வேளாண் நிலங்களுக்கு நேர்ந்துள்ள பாதிப்பு, குறைந்துபோன ஊழியர் எண்ணிக்கை ஆகியவற்றால் உக்ரேனியப் பொருளியல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

அதன் மீட்புக்கும் மறு நிர்மாணத்துக்கும் குறைந்தது 349 பில்லியன் டாலர் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது. 

போருக்கு முந்திய உக்ரேனியப் பொருளியல் அளவில் அது ஒன்றரை மடங்குக்கும் மேல் என்று கணிக்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்