உரிமமின்றி கடன்கொடுத்த சந்தேகத்தின் தொடர்பில் 181 பேரிடம் விசாரணை

(கோப்புப் படம்: TODAY)
உரிமமின்றிக் கடன் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 181 பேரை விசாரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்கள், 14 வயதுக்கும் 77 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இம்மாதம் 10ஆம் தேதி முதல், நேற்று (21 ஜனவரி) வரை, குற்றப் புலனாய்வுத் துறையையும் 7 காவல்துறை நிலப் பிரிவுகளையும் சேர்ந்த அதிகாரிகள், தீவு முழுவதும் நடத்திய சோதனையின்போது, அந்தச் சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.
அவர்களில் 28 பேர், தானியக்க வங்கிப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
மேலும் 15 பேர், கடன் வாங்கியவர்களை அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
எஞ்சிய 137 பேர், வங்கிக் கணக்குகளைத் திறந்து, வங்கி அட்டையையும் அதன் ரகசிய எண்ணையும் உரிமமின்றிக் கடன் கொடுப்பவர்களிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணை தொடர்கிறது.