சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"சமைக்காத, அரைகுறையாகச் சமைக்கப்பட்ட அசைவம்- எச்சரிக்கையுடன் சாப்பிடுங்கள்"
வாசிப்புநேரம் -

Mediacorp
சிங்கப்பூரில் சென்ற வாரம் Don Donki Singapore நிறுவனத்தின் 100AM கடைத்தொகுதிக் கிளையின் சஷிமி (Sashimi) உணவைச் சாப்பிட்ட தம்பதிக்கு அதிர்ச்சி.
அந்தச் சமைக்கப்படாத மீனின் உடலில் புழு ஒன்று ஊர்ந்துசெல்வதைப் பார்த்து மிரண்டு போனது அந்தத் தம்பதி மட்டுமல்ல....இணையவாசிகளும் தான்.
சம்பவத்தை அடுத்து சமைக்கப்படாத உணவு குறித்தும், அரைகுறையாகச் சமைக்கப்பட்ட உணவு குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன.
விவரங்களைத் திரட்டியது 'செய்தி'.
சமைக்கப்படாத இறைச்சி, கடல் உணவு வகைகள் என்றால்?
பாதி சமைக்கப்பட்ட இறைச்சி, கடல் உணவு வகைகள் என்றால்?
"உணவு பாதுகாப்பானதா - சரிபார்ப்பது அவசியம்"
"இறைச்சி, கடல் உணவு வகைகளில் நுண்ணுயிர்கள் உள்ளன. அவற்றை ஒழுங்காகக் கையாளவில்லை என்றால் சாப்பிடுபவர்களுக்குப் பல சிக்கல்கள் ஏற்படலாம். நச்சு அதில் ஒன்று," என்று
ஊட்டச்சத்து நிபுணராக வேலை செய்யும் பிரியங்கா செல்வநாதன் (Priyanka Selvananthan) 'செய்தி'யிடம் கூறினார்.
உணவகங்களுக்குச் செல்லும்போது, உணவு பாதுகாப்பானதா இல்லையா எனச் சரிபார்ப்பது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
அந்த உணவகம் HACCP சான்று பெற்றதாக இருந்தால் நல்லது என்றார் அவர்.
"இந்திய உணவில் அசைவத்தை முழுமையாகச் சமைப்பதே வழக்கம்"
"இந்தியர்கள் பெரும்பாலும் இறைச்சி, கடல் உணவு வகைகள் ஆகியவற்றை முழுமையாகச் சமைப்பது வழக்கம். காலங்காலமாக இப்படிச் சமைத்துப் பழகிவிட்டோம். அரைகுறையாகச் சமைத்து சாப்பிட்டால் நம் உடல் அதனை ஏற்றுக் கொள்ளாது," என செய்தி'யிடம் பேசிய சமையல் நிபுணர் அரிஃபின் (Ariffin) சொன்னார்.
"இந்தியர்கள் மஞ்சள் தூள், உப்பு, போன்றவற்றைச் சேர்க்கும்போது இறைச்சி, கடல் உணவு வகைகள் ஆகியவற்றில் இருக்கக்கூடிய கிருமிகள் அனைத்தும் ஒழிந்துவிடும்".
"கண்ணுக்கும், மனத்துக்கும், வாய்க்கும் சுவையாகத் தென்படும் உணவு நம் உடலுக்கு ஏற்புடையதாக இருக்குமா எனப் பார்த்துக்கொள்ள வேண்டும்,"
என்றும் சமையல் நிபுணர் அரிஃபின் கூறினார்.
இந்திய உணவைப் பொறுத்தவரை அரைகுறையாகச் சமைக்கப்பட்ட அசைவத்தை அறவே தொடக்கூடாது என்றார் அவர்.
அவற்றைச் சாப்பிட்டால் நச்சு, நாள்பட்ட அமிலத்தன்மைப் பிரச்சினை (Chronic Acidity) போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு என்றும் அவர் சொன்னார்.

- சூடுபடுத்தப்படாதவை, வேகவைக்காதவை, வறுக்கப்படாதவை, எந்தச் சமையல் முறையையும் பயன்படுத்தாதவை
பாதி சமைக்கப்பட்ட இறைச்சி, கடல் உணவு வகைகள் என்றால்?
- முழுமையாகச் சமைக்கப்படாமல், அதன் மிருதுத் தன்மையுடன் அரைகுறையாக வேகவைத்தோ, வறுத்தோ எடுக்கப்பட்டவை.
"உணவு பாதுகாப்பானதா - சரிபார்ப்பது அவசியம்"
"இறைச்சி, கடல் உணவு வகைகளில் நுண்ணுயிர்கள் உள்ளன. அவற்றை ஒழுங்காகக் கையாளவில்லை என்றால் சாப்பிடுபவர்களுக்குப் பல சிக்கல்கள் ஏற்படலாம். நச்சு அதில் ஒன்று," என்று
ஊட்டச்சத்து நிபுணராக வேலை செய்யும் பிரியங்கா செல்வநாதன் (Priyanka Selvananthan) 'செய்தி'யிடம் கூறினார்.
உணவகங்களுக்குச் செல்லும்போது, உணவு பாதுகாப்பானதா இல்லையா எனச் சரிபார்ப்பது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
அந்த உணவகம் HACCP சான்று பெற்றதாக இருந்தால் நல்லது என்றார் அவர்.
"இந்திய உணவில் அசைவத்தை முழுமையாகச் சமைப்பதே வழக்கம்"
"இந்தியர்கள் பெரும்பாலும் இறைச்சி, கடல் உணவு வகைகள் ஆகியவற்றை முழுமையாகச் சமைப்பது வழக்கம். காலங்காலமாக இப்படிச் சமைத்துப் பழகிவிட்டோம். அரைகுறையாகச் சமைத்து சாப்பிட்டால் நம் உடல் அதனை ஏற்றுக் கொள்ளாது," என செய்தி'யிடம் பேசிய சமையல் நிபுணர் அரிஃபின் (Ariffin) சொன்னார்.
"இந்தியர்கள் மஞ்சள் தூள், உப்பு, போன்றவற்றைச் சேர்க்கும்போது இறைச்சி, கடல் உணவு வகைகள் ஆகியவற்றில் இருக்கக்கூடிய கிருமிகள் அனைத்தும் ஒழிந்துவிடும்".
"கண்ணுக்கும், மனத்துக்கும், வாய்க்கும் சுவையாகத் தென்படும் உணவு நம் உடலுக்கு ஏற்புடையதாக இருக்குமா எனப் பார்த்துக்கொள்ள வேண்டும்,"
என்றும் சமையல் நிபுணர் அரிஃபின் கூறினார்.
இந்திய உணவைப் பொறுத்தவரை அரைகுறையாகச் சமைக்கப்பட்ட அசைவத்தை அறவே தொடக்கூடாது என்றார் அவர்.
அவற்றைச் சாப்பிட்டால் நச்சு, நாள்பட்ட அமிலத்தன்மைப் பிரச்சினை (Chronic Acidity) போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு என்றும் அவர் சொன்னார்.
ஆதாரம் : Mediacorp Seithi