Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்த சிங்கப்பூரர்களுக்கு எளிதில் வேலை கிடைத்ததா?

வாசிப்புநேரம் -
உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்த சிங்கப்பூரர்களுக்கு எளிதில் வேலை கிடைத்ததா?

கோப்புப் படம்

வெளியீடு : 04 Feb 2026 09:15PM புதுப்பிப்பு : 04 Feb 2026 10:43PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளிநாட்டில் படித்தவர்களை விட உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்த சிங்கப்பூரர்களுக்கு வேலைச் சந்தையில் சற்று சாதகமான நிலை உள்ளது.

மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) நாடாளுமன்றத்தில் விவரம் தந்தார்.

25 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட பட்டதாரிகளிடையே 2025இல்.....

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களின் வேலையின்மை விகிதம் 0.8 விழுக்காடு.

சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களின் வேலையின்மை விகிதம் 0.7 விழுக்காடு.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் படித்தாலும் சரி சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்தில் படித்தாலும் சரி 10இல் 9 பேருக்கு வேலை கிடைத்ததாக டாக்டர் டான் சொன்னார்.

பட்டதாரிகள் சீரான முறையில் ஊழியரணியில் சேரத் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்