நிலத்துக்கு அடியில் என்ன இருக்கிறது? தோண்டாமல் தெரிந்துகொள்ள புதிய தொழில்நுட்பம்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நிலத்தடியில் செல்லும் பயனீட்டுச் சேவைகளின் நிர்வாகத்தை மேம்படுத்தத் தொழில்நுட்பம் உதவவிருக்கிறது.
நிலத்துக்குக் கீழே என்ன இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறியும் தொழில்நுட்பம் மேலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும்.
ஆய்வுக்காக நிலத்தைத் தோண்டும் தேவையை அது குறைக்கும்.
அதன்வழி சாலைப் பயனீட்டாளர்களுக்கு இடையூறுகள் குறையும்.
நிலத்தை ஊடுருவிப் பார்க்கும் ரேடார், இடங்களைக் கண்டறியும் மின்காந்தக் கருவிகள்...
நிலத்தைத் தோண்டுவதற்கு முன்னால் அதன் கீழ் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய இவை திட்ட நிர்வாகிகளுக்கு உதவும்.
வெவ்வேறு நிறுவனங்களின் மின்சார, தொலைத்தொடர்புக் கம்பிவடங்களை ஒரே குழாய் வழியாக அனுப்புவது மற்றொரு தீர்வாக இருக்கும்.
நிலத்தடிப் பயனீட்டுக் கட்டமைப்புத் திட்டங்களை ஒருங்கிணைக்க வேலை நடைமுறையும் மேம்படுத்தப்படும்.
2024ஆம் ஆண்டு முதல் தெங்கா நியூடவுன், துவாஸ் ரோடு மேம்பாலச் சாலை போன்ற திட்டங்களில் அது பயன்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுமானத்துக்கு முன்னதாவே சிக்கல்களை அடையாளங்கண்டு அவற்றுக்குத் தீர்வு காண இது உதவுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார்.
அதன் மூலம் மேலும் சுமுகமாகவும் திறன்மிக்க வகையிலும் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றார் அவர்.

ஆதாரம் : Mediacorp Seithi