Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை நோக்கிய சரியான பாதையில் சிங்கப்பூர்"

வாசிப்புநேரம் -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி சூடுபிடிக்கிறது... 

"இவ்வேளையில், சிங்கப்பூர் உலகக் கிண்ணம் போன்ற அனைத்துலகக் காற்பந்துப் போட்டியில் சேரத் தகுதி பெறுமா?"

என்ற கேள்வி மாறி...

அது எப்போது நடக்கும்?

என்ற கேள்வி எழுந்துள்ளது. 

சிங்கப்பூரின் காற்பந்துச் சூழல் குறித்து சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கத்தின் காற்பந்து உத்திப் பிரிவுத் தலைவர் பிலிப்பே ஆவிடம் (Philippe Aw) பேசியது. 

  • Unleash the Roar - திட்டம்...

பலதரப்புகள் சேர்ந்து சிங்கப்பூரைப் பெரிய போட்டிகளில் கொண்டுசேர்க்கும் திட்டம் இது. 

  • திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

⚽ காற்பந்து விளையாட்டில் இளையர் ஈடுபாடு, மேம்பாடு
⚽ பயிற்றுவிப்பாளர்களின் திறன்கள் 
⚽ சிறந்த, தரமான விளையாட்டு ஆற்றல்களை வளர்ப்பது

  • உலகக் கிண்ணம் போன்ற முக்கியக் காற்பந்துப் போட்டிகளில் சேர்வதற்கான வாய்ப்புகளை Unleash The Roar திட்டம் எவ்வாறு அதிகரிக்கும்? 

⚽ இளையர்களின் காற்பந்து விளையாட்டுத் திறனை வளர்ப்பதன் மூலம் நாடளவில் அந்த விளையாட்டுக்கான ஆர்வத்தை அதிகரிக்கலாம். 

⚽ பல திறனாளர்கள் இருக்கும்போது அவர்களில் சிறந்தவர்களைத் தெரிவுசெய்து அனைத்துலகப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான சிறந்த அணியை அமைக்கலாம்

⚽ பயிற்றுவிப்பாளர்களின் திறன்களை மேம்படுத்தி வளர்த்துக்கொள்வதன் மூலம், காற்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் பிற நாடுகளின் விளையாட்டாளர்களின் அளவுக்கு உள்ளூர்த் திறனாளர்களின் ஆற்றலைப் பெருக்கலாம். 

2030 அல்லது 2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் கலந்துகொள்ளுமா என்று ஆவிடம் கேட்டபோது....

பொறுமையே பெருமை தரும் என்று அவர் சொன்னார். 

Unleash The Roar திட்டம் ஒரு நீண்டகாலத் திட்டம். அதனால், அதற்கு இன்னும் நேரம் எடுக்கும். இருப்பினும், உலகக் கிண்ணப் போட்டியை நோக்கிய சரியான பாதையில் சிங்கப்பூர் செல்கிறது என்கிறார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்