Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் மாற்றங்கள்

வாசிப்புநேரம் -
பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

வகுப்பறைகளில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதைக் குறிக்கும் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் இனி அவர்களுக்கு வழங்கப்படும்.

பிள்ளையை அடிப்பது என்று கருதப்படுவது எது? பிள்ளைகளின் உணர்வுகளைச் சமாளிப்பது எப்படி?...போன்ற கேள்விகளுக்கு ஆசிரியர்களுக்கு விடை கிடைக்கும்.

வகுப்பறைகளில் நடைபெறக்கூடிய பல சம்பவங்களை எப்படிச் சமாளிப்பது என்பதும் புதிய பயிற்சியில் கற்றுத்தரப்படும்.

குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு (ECDA) செய்த மதிப்பாய்வைத் தொடர்ந்து பாடக்கலைத்திட்டத்தில் அந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

கல்வி, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) அதனைத் தெரிவித்தார்.

பிராஸ் பாசாவில் (Bras Basah) உள்ள குழந்தைப் பருவ மேம்பாட்டுக்கான தேசியக் கல்விக் கழகத்துக்குச் (NIEC) சென்றபோது அவர் அவ்வாறு கூறினார்.

தற்போது 4 இடங்களில் பாலர் பள்ளி ஆசிரியர்கள் புதிய பாடக்கலைத்திட்டத்தைக் கற்கலாம்.

அண்மை மாதங்களில் பாலர் பள்ளி ஆசிரியர்கள் பிள்ளைகளைத் தவறான முறைகளில் கையாண்ட சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

அதைத் தொடர்ந்து, பாலர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கும் கல்வி நிலையங்களின் பாடக்கலைத்திட்டம், இவ்வாண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்படும் என்ற நம்பப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்