சிங்கப்பூர் exclusive
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்: அன்றும் இன்றும்
வாசிப்புநேரம் -
(படம்: கீர்த்திகா பெருமாள்)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
1950இல் செயின்ட் ஜார்ஜ்ஸ் (St George’s) ரோடு தமிழ்ப்பள்ளி என்றழைக்கப்பட்ட பள்ளி...
இப்போது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையமாக
சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் தூணாக விளங்குகிறது.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் எப்படி உருவானது?
பொதுப்பணித் துறைத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காகவே தொடங்கப்பட்டது செயின்ட் ஜார்ஜ்ஸ் ரோடு தமிழ்ப்பள்ளி.
🏫 1960களில் அது அரசாங்கத் தமிழ்ப்பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டது.
🏫 1970களில் மாணவர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
தமிழ்ப்பாடம் கற்றுத்தரப்படாத பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தது.
🏫 1978இல் செயின்ட் ஜார்ஜ்ஸ் ரோடு தமிழ் நிலையம் என்று பெயர் மாற்றம் கண்டது.
🏫 1982இல் நிலையம் 588C சிராங்கூன் ரோட்டில் இருந்த முன்னைய பீட்டி உயர்நிலைப்பள்ளியின் வளாகத்திற்கு மாறியது.
செயின்ட் ஜார்ஜ்ஸ் ரோடு தமிழ் நிலையம்...செயிண்ட் ஜார்ஜ்ஸ் ரோடு தமிழ்மொழி நிலையமானது.
அதே காலக்கட்டதில் ரங்கூன் ரோட்டில் இருந்த உமறுப்புலர் தமிழ் உயர்நிலைப்பள்ளி மூடப்பட்டது.
சிங்கப்பூரின் ஒரே தமிழ் உயர்நிலைப்பள்ளி அது.
சிங்கப்பூரில் தமிழ்மொழியை வளர்க்கப் பங்களித்த பள்ளியின் பெயர் நிலைத்திருக்கவும்...
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க் கவிஞர் உமறுப்புலவரின் பெயர் நிலைத்திருக்கவும்...
செயின்ட் ஜார்ஜ்ஸ் ரோடு தமிழ்மொழி நிலையத்துக்குப் புதிய பெயர் வைக்கப்பட்டது.
🏫 1983இல் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் அமைந்தது.

🏫 2001இல் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் தமிழ்சார்ந்த கலை, இலக்கியம், கலாசாரத்தை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றும் என்று அப்போதைய துணைப்பிரதமர் S ஜயக்குமார் சொன்னார்.
அது தேசிய தமிழ் மொழிவள நிலையமாக விளங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
🏫 2011இல் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் 2 பீட்டி ரோட்டுக்கு வந்தது.
சிங்கப்பூரின் ஒரே தமிழ்க்கல்வி மரபுடைமை நிலையமும் அதில் திறக்கப்பட்டது.
🏫 2020இலிருந்து...
தேசியக் கல்விக்கழகத்தின் பயிற்சி ஆசிரியர்களுக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது.
🏫 2027இல்
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் விக்டோரியா லேனுக்கு இடம் மாறுகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi