சிங்கப்பூர் exclusive
இடம் மாறும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்… சிலருக்கு இது இரண்டாவது இல்லம்
This audio is generated by an AI tool.
திருவள்ளுவர் சிலை...வாழை மரங்கள்.. சிங்கப்பூர்த் தமிழ்க்கல்வி மரபுடைமையகம்..கபடித் திடல்...
2 பீட்டி ரோட்டில் இருக்கும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சின்னஞ்சிறு அம்சங்கள் கூட தமிழைப் பற்றிப் பேச முனைகின்றன.
தமிழ் கற்றுக்கொடுக்கப்படாத பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு நிலையம் ஒரு வகுப்பறையாக அமைகிறது.
இளையர்களிடம் தமிழ் மொழியையும் கலசாரத்தையும் கொண்டு சேர்க்கப் பின்னணியில் சிலரின் அர்ப்பணிப்பு உள்ளது.
அவர்களைப் பொறுத்தவரை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் அவர்களின் இரண்டாவது இல்லமாக விளங்குகிறது.
நிலையம் 2027ஆம் ஆண்டில் இடம் மாறுவதை முன்னிட்டு 'செய்தி' அவர்களிடம் பேசியது.