Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமெரிக்கா தென்கிழக்காசியாவுடான பங்காளித்துவத்தை முக்கியமாகக் கருதுகிறது: பிரதமர் லீ

வாசிப்புநேரம் -
அமெரிக்கா தென்கிழக்காசியாவுடான பங்காளித்துவத்தை முக்கியமாகக் கருதுகிறது: பிரதமர் லீ


(படம்: Ministry of Communications and Information)


தென்கிழக்காசிய நாடுகளுடன் உள்ள பங்காளித்துவத்தை அமெரிக்கா மதிப்பதாகப் பிரதமர் லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

உலக விவகாரங்களின் மத்தியில் இது ஒரு முக்கிய தருணம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆசியான்- அமெரிக்கச் சந்திப்பு தற்போது வாஷிங்டனில் நடைபெறுகிறது.

ரஷ்யாவின் படையெடுப்பு, நோய்ப்பரவலுக்குப் பிந்திய சூழல், வட்டார நெருக்கடிகள், சர்ச்சைக்குரிய அமெரிக்க-சீன விவகாரம் ஆகியவற்றைப் பிரதமர் சுட்டினார்.

இருப்பினும் அவற்றின் மத்தியில் அமெரிக்கா ஆசியான் மீது கவனம் செலுத்தி, அதன் தலைவர்களை வரவழைத்து, உறவை மேம்படுத்த முற்படுவதை அவர் பாராட்டினார்.

அதன் வழி இந்த வட்டாரத்திற்கு நன்மை விளையும் என்று திரு. லீ கூறினார்.

அமெரிக்கா இந்த வட்டாரத்தில் ஆக்கரமான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, இன்றியமையாத பங்கையும் ஆற்றுவதாக சிங்கப்பூர் நீண்டகாலமாக நம்புகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆசியான்- அமெரிக்கச் சந்திப்பின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் ஆசியான்- அமெரிக்க விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை அமைக்கக் கடப்பாடு கொண்டிருப்பதாக இரு தரப்பும் குறிப்பிட்டன.

வட்டாரத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை நிலைநாட்டுவதில் உள்ள கடப்பாட்டையும் அவை மறுவுறுதிசெய்துகொண்டன.

விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவத்தைச் சிங்கப்பூர் வரவேற்பதாகப் பிரதமர் லீ கூறினார்.

"இரு தரப்பும் பலனடையும் வகையில் அர்த்தமுள்ள விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை எதிர்பார்க்கிறோம். அதன் மூலம், பொதுச் சுகாதாரம், உள்கட்டமைப்பு, இயற்கை எரிசக்தி உள்ளமைப்பு ஆகிய அம்சங்களிலும் மேலும் ஒத்துழைக்க விரும்புகிறோம்,"

என்று அவர் சொன்னார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்