Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"சீனாவும் அமெரிக்காவும் தைவான் விவகாரத்தில் மோதலை நாடவில்லை"

வாசிப்புநேரம் -
"சீனாவும் அமெரிக்காவும் தைவான் விவகாரத்தில் மோதலை நாடவில்லை"

Ministry of foreign affairs

சீனாவும் அமெரிக்காவும் தைவான் விவகாரத்தில் மோதலை நாடவில்லை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

அரசியல் காரணங்களுக்காக அவ்விரு நாடுகளும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வந்திருப்பதாக அவர் சொன்னார். 

அதன் காரணமாக விபத்தும் தப்புக் கணக்கும் ஏற்பட்டுவிடலாம் என்று அவர் குறிப்பிட்டார். 

புனோம் பென்னில் நடைபெற்ற ஆசியான் அமைச்சர்நிலைக் கூட்டத்தின் முடிவில் டாக்டர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

இப்போதைய நிலவரம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஆபத்தான பிளவு ஏற்பட்டிருப்பதைக் காட்டுவதாக அவர் சொன்னார். 

அவர் முன்னதாக ஆசியான் கூட்டத்துக்கு இடையே சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) இருவரையும் தனித்தனியே சந்தித்தார்.

இவ்வாரத் தொடக்கத்தில் திருமதி பெலோசி சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது அவரையும் டாக்டர் பாலகிருஷ்ணன் சந்தித்தார். 

என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அந்தச் சந்திப்புகள் தமக்கு உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa