Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வெனிசுவேலாவில் அமெரிக்காவின் செயல் அனைத்துலகச் சட்டத்தை மீறியது: மூத்த அமைச்சர் லீ

வாசிப்புநேரம் -
வெனிசுவேலாவில் அமெரிக்காவின் செயல் அனைத்துலகச் சட்டத்தை மீறியது: மூத்த அமைச்சர் லீ
(படம்: CNA/Jeremy Long)
வெளியீடு : 08 Jan 2026 01:38PM புதுப்பிப்பு : 08 Jan 2026 03:03PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்கா, வெனிசுவேலாவில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை மிகுந்த அக்கறைக்குரியது என்று மூத்த அமைச்சர் லீ சியென் லூங் (Lee Hsien Loong) கூறியிருக்கிறார்.

குறிப்பாக சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு அது கவலைக்குரியது என்றார் அவர்.

யூசுஃப் இஷாக் (Yusof Ishak) கல்விக் கழகத்தின் ISEAS கருத்தரங்கில் திரு லீ பேசினார்.

ஒரு நாடு வேறோரு நாட்டின் மீது படையெடுப்பது குறித்த சிங்கப்பூரின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் செயல் அனைத்துலகச் சட்டத்தையும் ஐக்கிய நாட்டு நிறுவனச் சாசனத்தையும் மீறியிருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றார் திரு லீ.

அமெரிக்கா-சீனா போட்டி, வலுவிழந்துள்ள அனைத்துலக வர்த்தகச் சட்டங்கள், சிறிய நாடுகள் மீது அதிகமான நெருக்கடி ஆகியவற்றால் உலகம் நிச்சயமற்ற சுழலை எதிர்நோக்குவதாகவும் அவர் சொன்னார்.

சிங்கப்பூர் போன்ற நாடுகள் வெளிப்படையாய் இருந்து, வட்டார நாடுகளுடன் உறவை வலுப்படுத்தி, வல்லரசுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் எந்தத் தரப்பையும் ஆதரிக்காமல் இருப்பதே நல்லது என்று அவர் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்