Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமெரிக்கா, சிங்கப்பூருடன் பொருளியல் ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருப்பது, அது சிங்கப்பூர் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது- பொருளியல் நிபுணர்

அமெரிக்கத் துணையதிபர் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட வருகையைப் பொருளியல், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதலாம் எனப் பொருளியல் நிபுணர் 'செய்தி'யிடம் கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -

அமெரிக்கத் துணையதிபர் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட வருகையைப் பொருளியல், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதலாம் எனப் பொருளியல் நிபுணர் 'செய்தி'யிடம் கூறியுள்ளார்.

அது ஓர் அரசியல், பொருளியல் மைல்கல் என்றார் பொருளியல் நிபுணர் திரு. சீனி ஜாஃபர் கனி.

அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸின் சிங்கப்பூர்ப் பயணம் சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அதிகபட்ச அரசியல், பொருளியல் ஒத்துழைப்பையும், சிங்கப்பூருக்கு அமெரிக்கா வழங்கும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது என்றும் திரு. சீனி கூறினார்.

  • நீண்டகாலச் சுற்றுச்சூழல் சவால்கள்
  • உள்கட்டமைப்பு மேம்பாடு
  • இணையப் பாதுகாப்பு

ஆகியவற்றின் தொடர்பில் இணைந்து செயல்படுவதற்கு சிங்கப்பூரும் அமெரிக்காவும் இணக்கம் கண்டுள்ளன.

(படம்: EVELYN HOCKSTEIN / POOL / AFP)

படம்: EVELYN HOCKSTEIN / POOL / AFP

இணையப் பாதுகாப்பில் இரு நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

நிலையான வளர்ச்சி காணவும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தீர்வுகளில் கவனம் செலுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்படவிருக்கின்றன.

படம்: HDB

படம்: EVELYN HOCKSTEIN / POOL / AFP

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் அண்மையில் அதிகாரத்துக்கு வந்ததைச் சுட்டினார் திரு. சீனி.

திருவாட்டி ஹாரிஸ் விரைவில் இந்த வட்டாரத்துக்கு வந்தது, வட்டாரத்தின் நிலைத்தன்மையைக் கட்டிக்காக்க அமெரிக்கா கொண்டுள்ள கடப்பாட்டைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

(படம்: EVELYN HOCKSTEIN / POOL / AFP)

படம்: EVELYN HOCKSTEIN / POOL / AFP

அமெரிக்காவுடனான நல்லுறவு மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிங்கப்பூரின் பொருளியலும் மேம்படும் எனத் திரு. சீனி ஊகிக்கிறார்.

இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு வளரும்போது, அமெரிக்க நிறுவனங்கள், சிங்கப்பூரில் மேலும் முதலீடு செய்ய முன்வரலாம்

என்றார் திரு. சீனி.

முக்கியமாக, இந்த வட்டாரத்தில் வாய்ப்புகள் உள்ள பல துறைகளை அமெரிக்க நிறுவனங்கள் அடையாளம் கண்டு, அவற்றில் முதலீடு செய்வதற்கு சிங்கப்பூரை ஒரு தளமாகப் பயன்படுத்தவும் வாய்ப்பு கிட்டலாம்

என்று சொன்னார் அவர்.

எனவே, அமெரிக்கா, சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்து பொருளியல் ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருப்பது, அது சிங்கப்பூர் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என்றார் திரு. சீனி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்