Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"அமெரிக்கா சிங்கப்பூருக்கு விதித்த 10% வரியைத் தக்கவைப்பதே முக்கியம்"

வாசிப்புநேரம் -
நிச்சயமற்ற உலகப் பொருளாதாரச் சூழலில் சிங்கப்பூருக்கு உகந்த எதிர்காலத்தைச் சிங்கப்பூரர்களே உருவாக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

தேசிய தினக் கூட்ட உரையில் அவர் சிங்கப்பூர்ப் பொருளாதாரம் பற்றிப் பேசினார்.

அமெரிக்க வரிவிதிப்பு உலகளவில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதைத் திரு வோங் சுட்டினார்.

சிங்கப்பூருக்கு அமெரிக்கா 10 விழுக்காடு வரி விதித்துள்ளது.

இது அமெரிக்கா விதிக்கும் ஆகக் குறைவான வரி என்றாலும் இது நிலைக்குமா என்பது யாருக்கும் தெரியாது என்றார் பிரதமர்.

பிரதமர் வோங்கின் கருத்துகளைப் பொருளாதார நிபுணர் சுந்தர முத்தையா வரவேற்றார்.
Related article image
"சிங்கப்பூருக்கு 10 விழுக்காடு வரி மட்டும் விதிக்கப்பட்டிருப்பதால் அது நமக்குச் சாதகமாக இருக்கலாம். அமெரிக்காவுக்குச் சிங்கப்பூர் பொருள்களை எளிதாக ஏற்றுமதி செய்யலாம். மற்ற உலகளாவிய நிறுவனங்களும் சிங்கப்பூரில் முதலீடு செய்ய முன்வரும்,"
என்று அவர் கூறினார்.

ஆனால் 10 விழுக்காடு வரி உறுதியல்ல என்றார் அவர். அந்த வரி உயராமல் இருப்பதை உறுதிசெய்ய அமெரிக்காவுடனான நல்லுறவை சிங்கப்பூர் பேணிக்காக்க வேண்டும்; சிங்கப்பூரின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

உலகப் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் இருக்கும்போது சிறிய நாடான சிங்கப்பூர் பாதிப்பு அடைய வாய்ப்பிருப்பதையும் அவர் சுட்டினார்.

 
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்