Skip to main content
அமெரிக்க வரியைத் தவிர்க்க முயற்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அமெரிக்க வரியைத் தவிர்க்க முயற்சி - நிறுவனங்கள், ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
அமெரிக்க வரியைத் தவிர்க்க முயற்சி - நிறுவனங்கள், ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் மெத்தைகளை முறைதவறி ஏற்றுமதி செய்ய முயன்றதாக நிறுவனங்கள் மீதும் தனிநபர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்புகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்த மெத்தைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தன.

ஆனால் மெத்தைகள் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டவை என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்கா விதிக்கும் வரியைத் தவிர்ப்பது நோக்கம்.

தகவல் அறிந்த சிங்கப்பூர் சுங்கத்துறை கடந்த பிப்ரவரி மாதம் விசாரணையைத் தொடங்கியது.

ஆகஸ்ட் 2022 முதல் ஜூன் 2025 வரை முறைகேடு நடந்தது தெரியவந்தது.

ஏற்றுமதி செய்யப்பட்ட மெத்தைகளின் மதிப்பு 23 மில்லியன் வெள்ளிக்கும் அதிகம்.

விவகாரம் தொடர்பில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

37 வயதுக்கும் 68 வயதுக்கும் இடைப்பட்ட மூவர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்