Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

950,000 குடும்பங்களுக்கு இம்மாதம் பொருள்சேவை வரி U-Save கட்டணக் கழிவு வழங்கப்படும்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் சுமார் 950,000 குடும்பங்களுக்குக் காலாண்டு அடிப்படையிலான பொருள்சேவை வரி U-Save கட்டணக் கழிவு இம்மாதம் வழங்கப்படும்.

வாசிப்புநேரம் -

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் சுமார் 950,000 குடும்பங்களுக்குக் காலாண்டு அடிப்படையிலான பொருள்சேவை வரி U-Save கட்டணக் கழிவு இம்மாதம் வழங்கப்படும்.

நிதி அமைச்சு அறிக்கை ஒன்றில் அதனைத் தெரிவித்தது.

வழக்கமாக வழங்கப்படும் U-Save கட்டணக் கழிவை விட, 2021ஆம் நிதி ஆண்டில் கூடுதலாக 50 விழுக்காடு கழிவு, இம்மாதமும் வரும் ஜூலை மாதமும் வழங்கப்படும்.

2021ஆம் ஆண்டு நிதியாண்டில் மொத்தம் 460 மில்லியன் வெள்ளி பெறுமானமுள்ள, வழக்கமான U-Save கட்டணக் கழிவும், U-Save சிறப்புக் கட்டணமும் இம்முறை வழங்கப்படும்.

குடும்பங்கள் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க ஆதரவு வழங்குவது நோக்கம்.

கூடுதல் ஆதரவாக, 900 மில்லியன் வெள்ளி "குடும்ப ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின்-கீழ்", U-Save சிறப்புக் கட்டணம் வழங்கப்படுகிறது

அந்தத் தொகுப்புத் திட்டம், கடந்த பிப்ரவரி மாதம் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

குறைந்த, நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்கள் அதன்கீழ் பயனடைவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்