ERP 2.0 மின்னியல் சாலைக் கட்டண முறை - பயன்கள்?
This audio is generated by an AI tool.
புதிய ERP 2.0 மின்னியல் சாலைக் கட்டண முறையின் தகவல்கள் போக்குவரத்தை நிர்வகிக்கவும் திட்டமிடவும் பயன்படுத்தப்படும்.
போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.
அனைத்துத் தகவல்களும் ஒருங்கிணைக்கப்படும்; அவை யாரிடமிருந்து பெறப்பட்டன என்ற விவரம் வெளியிடப்படமாட்டாது என்று திரு சியாவ் கூறினார்.
போக்குவரத்து சமிக்ஞைகள் மூலம் கூடுமானவரை போக்குவரத்தைச் சரளப்படுத்த ERP 2.0 முறையில் சேகரிக்கப்படும் தகவல்கள் உதவும்.
அவற்றைக் கொண்டு தற்போதுள்ள சாலைகளின் பயன்பாட்டை மேம்படுத்தும் வழிகளை அதிகாரிகள் ஆராய்வதாய் திரு சியாவ் கூறினார்.
எதிர்காலத்தில் கார்களின் எண்ணிக்கை கூடுவதற்கு ஏதுவான முயற்சிகளை எடுக்கவும் தகவல்கள் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
பேருந்து வழித்தடங்களைத் திட்டமிடவும், அதிகம் பயன்படுத்தப்படாத சாலைகளை அடையாளம் காணவும் அது உதவும் என்று மன்றத்தில் கூறப்பட்டது.
அத்தகைய சாலைகளைப் பாதசாரிகளும் சைக்கிளோட்டிகளும் பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்பட்டது.