Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொடக்கப்பள்ளி மாணவர்கள் பாதிப்பேருக்கு மேல் முதல் தடுப்பூசி போட்டுவிட்டனர்

வாசிப்புநேரம் -
தொடக்கப்பள்ளி மாணவர்கள் பாதிப்பேருக்கு மேல் முதல் தடுப்பூசி போட்டுவிட்டனர்

(படம்:Facebook/Ministry of Education)

சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளி மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு முதல் COVID-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மூன்றில் இரு பங்கினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பதிந்துகொண்டுள்ளனர். சிங்கப்பூரில் 12 வயதுக்குக்கீழ் உள்ள பிள்ளைகளுக்கான தடுப்பூசித் திட்டம் 3 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.

உலக அளவில் ஓமக்ரான் வகை நோய்ப்பரவல் கடுமையாகி வருவதாகக் கல்வியமைச்சர் சான் சுன் சிங் கூறினார். குறிப்பாகப் பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர் சுட்டினார்.

பெரும்பாலான மாணவர்களுக்கு வரும் மார்ச் மாதத்துக்குள் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று திரு.சான் நம்பிக்கை தெரிவித்தார்.

அதன்மூலம் பாதுகாப்பான முறையில் கற்றல் தொடரும் என்பதையும் அவர் குறிப்பிட்டார். அதோடு பெரும்பாலான மாணவர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டால் தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுகள் போன்ற நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்