Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

200,000 வெள்ளி மதிப்புள்ள மின்சிகரெட்டுகள் மற்றும் அவை தொடர்பான சாதனங்கள் பிடிபட்டன

வாசிப்புநேரம் -
200,000 வெள்ளி மதிப்புள்ள  மின்சிகரெட்டுகள் மற்றும் அவை தொடர்பான சாதனங்கள் பிடிபட்டன

படம்: Health Sciences Authority

சிங்கப்பூரில் சுமார் 200,000 வெள்ளி மதிப்புள்ள மின்சிகரெட்டுகளும் அவை தொடர்பான சாதனங்களும் பிடிபட்டுள்ளன. 

சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள், கடந்த வாரம் நடத்திய சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் அவை கைப்பற்றப்பட்டன. 

ஜனவரி 6ஆம் தேதி மின்சிகரெட்டுகளை விநியோகிக்கும் ஒரு நபரையும் கும்பலையும் குறிவைத்து, அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கினர்.

கேலாங், யீஷூன், சிராங்கூன் எனப் பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்ணும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

பிடிபட்டவர்கள் தடை செய்யப்பட்ட பொருள்களை Telegram செயலி வழி சட்டவிரோதமாக விளம்பரம் செய்து பலரிடம் விற்பனை செய்துள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

ஆடவர் ஒருவர், போதைப்பொருள் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்திலும் விசாரிக்கப்படுகிறார். 

மின்சிகரெட்டுகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருள்களை, ரகசியமாக செயலிகள் வழி விற்பனை செய்பவர்களை அணுக்கமாய்க் கண்காணித்து வருவதாக ஆணையம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa