வர்த்தகங்களுக்கு இலவச நிதி ஆதரவு!
படம்: Facebook/Enterprise Singapore
வர்த்தகங்கள் நிதி ஆலோசனைச் சேவைகளையும் வளங்களையும் இனி ஒரே தளத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
நிறுவனங்கள் நிதியாதரவு குறித்த விவரங்களை எளிய முறையில் நாட விரும்புவதாக அண்மைக் கருத்தாய்வில் தெரியவந்தது.
நிறுவனங்கள் நிதியை இன்னும் திறம்படக் கையாள்வதற்கு உதவுவதும் வேறு அமைப்புகளுடன் இணைந்து முதலீடுகளை உயர்த்துவதும் புதிதாய் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிதி ஆலோசனை நிலையத்தின் நோக்கம்.
நிதி தொடர்பிலான ஆலோசனைகளை அது வழங்கும்.
அதை சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனமும் Enterprise Singapore அமைப்பும் அறிமுகப்படுத்தியிருக்கின்றன.
புதிய நிலையம் சிங்கப்பூர் நிறுவனங்களின் நிதிக் கல்வியறிவை வலுப்படுத்தவும் கைகொடுக்கும்.
நீண்டகாலத்தில் நிறுவனங்களின் ஆற்றல்களை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது.
நிலையம் அதற்குத் துணைபுரியும்.