Skip to main content
சாலையும் சரித்திரமும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சாலையும் சரித்திரமும் - வீராசாமி ரோடு

சிராங்கூன் வட்டாரத்திற்குப் போகும்போது வீராசாமி ரோட்டிற்கு, நம்மில் பலர் சென்றிருப்போம். ஆனால், நம்மில் எத்தனை பேர், யார் வீராசாமி என்பதை அறிந்திருப்போம்?

வாசிப்புநேரம் -

சிராங்கூன் வட்டாரத்திற்குப் போகும்போது வீராசாமி ரோட்டிற்கு, நம்மில் பலர் சென்றிருப்போம். ஆனால், நம்மில் எத்தனை பேர், யார் வீராசாமி என்பதை அறிந்திருப்போம்?

Related article image

சிங்கப்பூரின் முதல் உள்ளூர் இந்திய மருத்துவர்களில் ஒருவராக டாக்டர் N.வீராசாமி திகழ்ந்தார். அவரின் நினைவாக 1927ஆம் ஆண்டு சாலைக்கு வீராசாமி ரோடு என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு முன்னர், அந்தச் சாலை ஜாலான் தம்பா என்று அழைக்கப்பட்டது.

லிட்டில் இந்தியா வட்டாரத்தில், இரண்டு சாலைகளுக்கு மட்டுமே பிரபலமான தமிழர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒன்று வீராசாமி ரோடு. மற்றொன்று சந்தர் ரோடு. 1864ஆம் ஆண்டு, வீராசாமி சிங்கப்பூரில் பிறந்தார்.

1920களுக்கு முன்னர், சிங்கப்பூரில் வெகுசில மருத்துவர்களே இருந்தனர். அவர்கள் பெரும்பாலானோர் ஐரோப்பியர்கள்.

உரிமம் பெற்ற முதல் உள்ளூர் இந்திய மருத்துவர்களில் ஒருவராக டாக்டர் N. வீராசாமி தனித்து விளங்கினார்.

ரோச்சோர் ரோட்டில் அவருடைய மருத்தகம் அமைந்திருந்தது.


மேலும் செய்திகள் கட்டுரைகள்