Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தகாத வார்த்தை கூறியதற்குத் தண்டனை... பேச்சைக் குறைத்த F1 ஓட்டுநர்

வாசிப்புநேரம் -
தகாத வார்த்தை கூறியதற்குத் தண்டனை... பேச்சைக் குறைத்த F1 ஓட்டுநர்

Lillian SUWANRUMPHA / AFP

சிங்கப்பூர் Grand Prix F1 கார்ப்பந்தயத்தில் Red Bull ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பென் (Max Verstappen) தமக்கு விதிக்கப்பட்ட தண்டணைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (19 செப்டம்பர்) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தகாத வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார்.

ஒளிபரப்புக்குத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக வெர்ஸ்டாப்பெனுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.  

அவர் சமூகச் சேவை செய்யவேண்டும் என்று நிர்வாக அமைப்பான FIA கூறியது.

அதன் முடிவை எதிர்க்கும் வெர்ஸ்டாப்பென் நேற்றிரவு செய்தியாளர்களிடம் ஒழுங்காகப் பேசவில்லை.

தகுதிச் சுற்றில் இரண்டாம் இடத்தில் வந்த அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோதெல்லாம் வெர்ஸ்டாப்பென் ஓரிரு வார்த்தைகளில் பதிலளித்தார்.

"நான் ஏன் முழுமையாகப் பதில் சொல்லவேண்டும்? தண்டனை எளிதில் கிடைத்துவிடும் என்பதால் நான் முடிந்தவரை பேச விரும்பவில்லை. வேண்டுமென்றால் வேறு இடத்தில் நேர்காணலை வைத்துக்கொள்ளலாம்," என்று அவர் சொன்னார்.

செய்தியாளர் கூட்டத்தில் வேண்டுமென்றே தகாத வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றும் அதற்குத் தண்டிக்கப்படுவது சரியல்ல என்றும் வெர்ஸ்டாப்பென் Sky Sports F1 ஊடகத்திடம் கூறினார்.

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்