Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கம்போடியாவிலிருந்து திரும்பிய வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு COVID-19 உறுதி

வாசிப்புநேரம் -
கம்போடியாவிலிருந்து திரும்பிய வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு COVID-19 உறுதி

(படம்: Singapore Ministry of Foreign Affairs)

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கம்போடியத் தலைநகர் புனோம் பென்னில் (Phnom Penh) நடைபெற்ற ஆசியான் அமைச்சர்நிலைக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய பின்னர், கிருமி தொற்றியது உறுதியானதாக அவர் Facebook பக்கத்தில் கூறினார்.

தமக்கு இலேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதற்குக் காரணம் தடுப்பூசிகளும் கூடுதல் தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டதே என்றார் அவர்.

கடந்த இரண்டு நாள்களில் தம்முடன் தொடர்பில் இருந்தவர்களை ART பரிசோதனை செய்துகொள்ளுமாறு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

அவர் சிரமத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அடுத்த சில நாள்களில் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் தம்மால் கலந்துகொள்ள இயலாது என்பதற்கும் அவர் வருத்தம் தெரிவித்தார். 

டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆசியான் அமைச்சர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இம்மாதம் (ஆகஸ்ட் 2022) 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை புனோம் பென்னில் இருந்தார்.

ஆதாரம் : CNA/fh(gs)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்