Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"அனைவரையும் உள்ளடக்கிய மீட்சியை அடைய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்" - வெளியுறவு அமைச்சு

வாசிப்புநேரம் -
"அனைவரையும் உள்ளடக்கிய மீட்சியை அடைய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்" - வெளியுறவு அமைச்சு

(MFA)

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, நோய்ப்பரவலுக்குப் பிந்திய காலத்தில் அனைவரையும் உள்ளடக்கும் மீட்சியை அடைய நாடுகள் ஒன்றாகப் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

அப்போதுதான் அனைத்துலக வர்த்தகம் தொடர்ந்து வெளிப்படையாகவும், கணிக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய முடியும் என்று அது விளக்கியது. 

இன்று ருவாண்டாவில் தொடங்கும் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்துக்கு முன்பு இடம்பெற்ற சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பேசினார்.

நோய்ப்பரவல் மூலம் நிறைய படிப்பினைகளைப் பெற முடிந்ததை அவர் சுட்டினார்.

எதிர்கால உலகளாவிய சவால்களைக் கையாள அவை நாடுகளின் திறமையை வலுப்படுத்தியிருப்பதாக டாக்டர் பாலகிருஷ்ணன் சொன்னார்.

50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 மின்னிலக்கமயமாதலைத் துரிதப்படுத்தும் அதே வேளையில், நம்பகத்தன்மையான விநியோகத் தொடர்களை உறுதி செய்வதன் அவசியத்தை டாக்டர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

அதிகரிக்கும் மின்னிலக்கத் திறன் இடைவெளியையும் தவிர்க்கும்படி அவர் அறிவுறுத்தினார். 

குறிப்பாகச் சிறிய நாடுகள் தனித்துப் பொருளியலை வழிநடத்துவது சாத்தியமானதல்ல என்று டாக்டர் பாலகிருஷ்ணன் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa