Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கணவரால் அடிக்கப்பட்டு, புகுந்த வீட்டிலிருந்து விரட்டப்பட்ட பெண்... இழந்த வாழ்க்கையை மீட்டுக்கொண்டார்

வாசிப்புநேரம் -
கணவரால் அடிக்கப்பட்டு, புகுந்த வீட்டிலிருந்து விரட்டப்பட்ட பெண்... இழந்த வாழ்க்கையை மீட்டுக்கொண்டார்

(படம்: CNA/Davina Tham)

கணவரால் துன்புறுத்தப்பட்டு வீட்டிலிருந்து விரட்டப்பட்டார் பெண் ஒருவர்.

44 வயது மலேசியரான திருவாட்டி லாய் கா யென் சுமார் 10 ஆண்டுகளாகத் தமது கணவருடன் வாழ்ந்து வந்தார். அவர் தமது கணவரை இணையத்தில் சந்தித்தார். முன்பு அவர் வேலைக்காகத் தினமும் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணம் செய்தார். திருமணமாகி மகள் பிறந்த பிறகு, பிள்ளைப் பராமரிப்பு நிலையம் சிங்கப்பூரில் இருந்ததால் அவர் இங்கேயே தங்கத் தொடங்கினார்.

கணவன்-மனைவி இருவரிடையில் திருவாட்டி லாய் ஒருவர் மட்டுமே நிரந்தர வேலையில் இருந்து குடும்பத்துக்குப் பணம் சம்பாதித்தார்.

சூதாட்டம், குடிப்பழக்கம் கொண்ட அவரது கணவர் திருவாட்டி லாயிடம் இருந்த பணத்தில் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டு தீய வழியில் செலவழித்தார். அதனால் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு நாள் அடியானது. அதில் மகளையும் சேர்த்துக்கொண்டார் கணவர்.

2020இல் குடும்பத்துடன் வசித்த வாடகை வீட்டிலிருந்து அவரைக் கணவர் வெளியேற்றினார்.

சட்டம் அவரைப் பாதுகாத்தது...

அந்நேரத்தில் அவர் தமது கடப்பிதழைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது. தமது உடைமைகளைக் கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை திருவாட்டி லாயின் கணவர். காலாவதியான கடப்பிதழுடன் சிங்கப்பூரில் தாம் சிக்கிக்கொள்வோமோ என்ற பயமும் அவரிடத்தில் தோன்றியது.

பிரச்சினையைத் தீர்க்கக் காவல்துறை முன்வந்தது. அதிகாரிகள் திருவாட்டி லாயின் கடப்பிதழையும் உடைமைகளையும் அவர் இருந்த வீட்டிலிருந்து பெற்றுக்கொண்டனர். மலிவு விடுதியில் ஓரிரவு தங்கிவிட்டு மறுநாள் திருவாட்டி லாய் குடும்பச் சேவை நிலையத்துக்குச் சென்று உதவி நாடினார்.

வெளிநாட்டவர் என்பதால் திருவாட்டி லாய்க்குத் தங்குமிடம் கிடைப்பது கடினமாக இருந்தது. அதனால் அவர் நிரந்தரவாசியான தமது சகோதரியுடன் தங்கியிருந்தார்.

இறுதியில் கணவரை விவாகரத்து செய்யத் துணிந்தார் அந்த மாது. குடும்ப நீதி ஆதரவுத் திட்டத்தின்கீழ் தொண்டூழிய வழக்கறிஞரின் உதவியுடன் அவரது திருமணவாழ்வு ஒரு முடிவுக்கு வந்தது.

முன்னாள் கணவரிடம் இருந்த மகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பிள்ளை வளர்ப்புக்கு மாதந்தோறும் தந்தையிடமிருந்து 200 வெள்ளி பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்