யீஷூனில் மூதாட்டியின் வீடு கரப்பானுக்கும் வீடாக மாறியது - வீட்டைச் சுத்தம் செய்ய ஒன்றுகூடிய சமூகம்
This audio is generated by an AI tool.
யீஷூன் வட்டாரத்தில் மூதாட்டி ஒருவரின் வீட்டில் கரப்பான்பூச்சிக் கூட்டம் பெருக்கெடுத்தது.
பல ஆண்டுகளாக வீட்டில் உள்ள பொருள்களை ஒழுங்குப்படுத்தாமலும், குப்பையை அகற்றாமலும் இருந்ததால் கரப்பான்பூச்சிகளுக்குக் கொண்டாட்டம்.
75 வயது மூதாட்டி மறதி நோயாலும் அவதியுறுகிறார்.
அவருக்கு உதவ மூன்று அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் முன்வந்தனர்.
வீட்டிற்குச் சென்றபோது பொருள்கள் குவிந்து கிடந்ததால் கதவை முழுமையாகத் திறக்கமுடியவில்லை.
எங்கும் பொருள்கள். வீட்டில் இடம் இல்லாமல் மூதாட்டி ஒரு மூலையில் உறங்கியது தெரிந்தது.
அதைச் சரிசெய்யத் தொண்டூழியர்கள் பொருள்களை அகற்றத் தொடங்கினர். அப்போது கரப்பான் கூட்டம் புறப்பட்டது.
தொண்டூழியர்கள் 6 மணி நேரத்துக்குள் வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்தனர்.
எவ்வாறு மூதாட்டியைப் பற்றித் தெரியவந்தது?
அவரைச் சைக்கிளோட்டி மோதியதால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அப்போது வீட்டில் உதவி தேவை என்ற விவரம் தெரிந்தது.
தொண்டூழிய அமைப்புகளின் உதவியை நாடியது மருத்துவமனை.
அனைவரும் ஒன்றுகூடி மூதாட்டிக்கு உதவ முன்வந்தது மனதை நெகிழ வைத்ததாகத் தொண்டூழியர் ஒருவர் குறிப்பிட்டார்.