Skip to main content
ஆங்கில இசை நிகழ்ச்சியில் "பல்லேலக்கா" தமிழ்ப் பாடல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆங்கில இசை நிகழ்ச்சியில் "பல்லேலக்கா" தமிழ்ப் பாடல்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல் பல்லேலக்கா.

2007-இல் ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.

அந்தப் பாடலைத்தான் இப்போது VOS குழுவினர் படைக்கவிருக்கின்றனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த, பெரும்பாலும் தமிழர்கள் அல்லாத பாடகர்களைக் கொண்டது Voices of Singapore (VOS) பாடகர் குழு.
படம்: தமிழவேல்
இக்குழுவிற்கும் 'சிவாஜி' தமிழ்த்திரைப்படப் பாடலுக்கும் என்ன தொடர்பு?

அமெரிக்கர் ஈதன் ஸ்பெரி முதன்முதலில் இப்பாடலைப் பாடகர் குழுக்கள் மேடையில் பாடுவதற்கு ஏதுவாக மாற்றியமைத்தார்.

எனினும் இப்போது புதிய பரிமாணத்தில் பாடலைப் படைக்கவிருக்கிறது VOS இளையர் பாடகர் குழு.

முதன்முறையாக சிங்கப்பூர் இந்தியர் பல்லிசை, பாடகர் குழுக்களுடன் இணைந்து பாடல் படைக்கப்படுகிறது.

குழுவின் இசை இயக்குநர் விக்னேஷ்வரியின் உதவியுடன் பாடகர்களின் தமிழ் உச்சரிப்பும் இசையும் மேலும் மெருகூட்டப்பட்டிருக்கின்றன.
படம்: தமிழவேல்
'ஒவ்வொரு வார்த்தையையும் அதிக முயற்சியெடுத்துக் கற்றுக்கொள்கிறார்கள். அதை இந்தப் பயிற்சிகளிலேயே பார்க்கலாம்,' என்று சிங்கப்பூர் இந்தியர் பல்லிசை, பாடகர் குழுக்கள் பாடகி திருப்புரசுந்தரி கூறினார்.

திருத்தங்களை அவ்வப்போதே அவர்கள் குறித்துக்கொண்டு உடனே உச்சரித்துத் திருத்திக்கொள்வார்கள் என்றும் அவர் சொன்னார்.

தமிழிசையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வது சவாலாக இருந்ததாகத் பிறமொழிப் பாடகர்கள் கூறினர்.

“பாடும் உத்திகளை மாற்றிக்கொள்வதும் பற்பல கமகங்களைச் சேர்த்துக்கொள்வதும் பலவிதமான மாற்றங்களைக் கொண்டுவருவதும் சவாலாக இருந்தன. ஏனெனில் வழக்கமான சீன, ஆங்கில பாப் இசைப் பாடல்களில் நான் இவ்வளவு ஏற்ற இறக்கங்களைப் பார்ப்பதில்லை. இத்தகைய மாறுபட்ட சங்கீத அலங்காரங்கள் இசையில் சேர்க்கப்படுகின்றன,” என்றார் பாடலில் முக்கிய வரிகளைப் பாடும் கெ பாங்யென் (Ke Bangyan).

பாடகர் குழு இசை நிகழ்ச்சிகள் மக்களைக் கவர பல உத்திகளைக் கையாள்கின்றன.

"பாடுவது ஒரு பக்கம்... பாடலுக்கு ஏற்றவாறு துடிப்பையும் கொண்டுவரவேண்டும் அந்தப் பாடலுக்கு ஏற்றவாறு அதன் தன்மைகளையும் கொண்டுவரவேண்டும்," என்று கூறினார் நிகழ்ச்சியில் மலாய் பாடல் ஒன்றைப் பாடவிருக்கும் ஷ்ருதி ஜெசிக்கா.

VOS பாடகர் குழு நாளை மறுநாள் அதன் SING60 - Voices of a Nation Gala Concert இசை நிகழ்ச்சியை நடத்துகிறது.

நிகழ்ச்சியில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் இடம்பெறுகின்றனர்.

மேல் விவரங்களுக்கு: https://www.voicesofsingapore.com/our-initiatives/upcoming-events/sing60-6th-anniversary-concert
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்