பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவரை அவமதித்ததாக வழக்கறிஞர் மீது கண்டனம்

Chia Wong Chambers
பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண்ணை அவமானப்படுத்தியதாக ஒரு வழக்கறிஞர் மீது குறைகூறல் எழுந்துள்ளது.
ஊடகக் குழு Wah!Banana-இன் முன்னாள் நடிகர் லேவ் பான்ஃபிலோவ் (Lev Panfilov) ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அண்மையில் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் (Law Society of Singapore) துணைத்தலைவர் திரு சியான் பூன் டேக் (Chia Boon Teck) வழக்கைப் பற்றி சமூக ஊடகத்தில் கருத்துரைத்தார்.
அது பாதிக்கப்பட்ட பெண்ணை அவமதிக்கும் வகையில் இருந்ததாக உள்ளூர் வழக்கறிஞர்கள் சிலர் கூறினர்.
திரு சியா மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் அவர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.
AWARE மகளிர் அமைப்பும் திரு சியாவைக் கண்டித்தது.
"மூத்த வழக்கறிஞர் பாதிக்கப்பட்டவரைக் கேலி செய்யும்போது அது அவமதிப்பு மட்டுமல்ல. ஆபத்தான செயலும் கூட." என்று அது Facebookஇல் சொன்னது.
இந்நிலையில் நடந்ததைக் கவனத்தில் கொண்டுள்ளதாக சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம் கூறியுள்ளது.
திரு சியா LinkedIn பதிவை அகற்றியுள்ளார்.
யாரையும் வேண்டுமென்றே குறைகூறவில்லை; வழக்கில் மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்க எண்ணியதாக அவர் சொன்னார்.