Skip to main content
பாலியல் பலாத்கார வழக்கு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாலியல் பலாத்கார வழக்கு - கருத்துரைத்த வழக்கறிஞரைக் கண்டித்த அமைச்சர் சண்முகம்

வாசிப்புநேரம் -
பாலியல் பலாத்கார வழக்கு -  கருத்துரைத்த வழக்கறிஞரைக் கண்டித்த அமைச்சர் சண்முகம்

(படம்: Singapore Parliament, Law Society of Singapore web page)

பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் கருத்துரைத்த வழக்கறிஞரை உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் கண்டித்துள்ளார்.

சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் (Law Society of Singapore) துணைத்தலைவர் திரு சியான் பூன் டேக்கின் (Chia Boon Teck) கருத்துகளைப் படித்துத் தாம் ஆச்சரியமடைந்ததாக அவர் சொன்னார்.

ஊடகக் குழு Wah!Banana-இன் முன்னாள் நடிகர் லேவ் பான்ஃபிலோவ் (Lev Panfilov) ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அண்மையில் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

வழக்கைப் பற்றி சமூக ஊடகத்தில் கருத்துரைத்த திரு சியா வரம்பை மீறியதாகத் திரு சண்முகம் சொன்னார்.

திரு சியா பாதிக்கப்பட்டவரைக் குறைகூறுவதாகவும் அவர் கூறினார்.

அது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் பெரிய பதவிகளில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டோரின் கருத்துகளை நிராகரித்துப் பேசுகிறார்களா என்பதைக் கவனிக்கவேண்டும் என்று திரு சண்முகம் சொன்னார்.

மற்ற சம்பவங்களில் பாதிக்கப்படுவோர் நடந்ததைப் பற்றி புகார் கொடுக்கத் தயங்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

"ஆண்களுக்கு எதிராகப் பெண்கள் சொல்வதை அப்படியே நம்பவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் வழக்கறிஞர்கள் எல்லை மீறி நடக்கக்கூடாது," என்றார் திரு சண்முகம். 

இந்நிலையில் சட்டத்துறையைச் சார்ந்த மற்றவர்களும் 
திரு சியாவைக் கண்டித்துள்ளனர்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்