திடீரென மூடப்பட்ட உடற்பிடிப்புக் கடைகள் - $904,000 இழந்த வாடிக்கையாளர்கள்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
வான் யாங் (Wan Yang) உடற்பிடிப்புக் குழுமத்தின் வாடிக்கையாளர்கள் 904,000 வெள்ளிக்கும் மேல் இழந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
குழுமம் தன்னுடைய கடைகளை எந்த அறிவிப்புமின்றித் திடீரென்று மூடியது.
அதனால் உடற்பிடிப்புச் சேவைகளுக்கு முன்கூட்டியே பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கத்தின் (CASE) தலைவர் மெல்வின் யோங் (Melvin Yong) தொகையைப் பற்றித் தெரிவித்தார்.
சென்ற மாதம் சம்பவம் குறித்துத் தெரியவந்தபோது வாடிக்கையாளர்கள் இழந்த தொகை 29,000 வெள்ளி என்று பதிவாகியிருந்தது.
நேற்றைய நிலவரப்படி 439 புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
வான் யாங் குழுமத்தின் 3 வர்த்தகங்கள் - வான் யாங் ஹொல்டிங்ஸ் (Wan Yang Holdings), வான் யாங் பாத அழுத்த சிகிச்சை நிலையம் (Wan Yang Foot Reflexology Centre), வான் யாங் சுகாதாரப் பொருள்கள், பாத அழுத்த சிகிச்சை நிலையம் ஆகியவை நவம்பர் 21ஆம் தேதி செயல்பாடுகளை முடக்கின.
தற்போது குழுமம் கலைக்கப்படுகிறது.

ஆதாரம் : CNA