Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

இரண்டாம் உலகப் போரில் சிங்கப்பூருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தெரிந்துகொள்ள வாய்ப்பு

சிங்கப்பூரில் இரண்டாம் உலகப் போரின்போது இழைக்கப்பட்ட, கொடுமைகள் பற்றித் தெரிந்துகொள்ள பொது மக்களுக்கு ஒரு வாய்ப்பு.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூரில் இழைக்கப்பட்ட, கொடுமைகள் பற்றித் தெரிந்துகொள்ள பொது மக்களுக்கு ஒரு வாய்ப்பு. Battle of Singapore திட்டத்தின், ஒரு பகுதியாக தேசிய மரபுடைமைக் கழகம் கண்காட்சி  ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஜப்பானிய ஆட்சியிலிருந்து சிங்கப்பூர் விடுவிக்கப்பட்ட 70 ஆண்டு நிறைவைக் குறிக்கிறது கண்காட்சி.

கண்காட்சியில் மொத்தம் 11 சம்பவங்கள் பற்றிய விவரங்கள்/ இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூர்ப் போர்க் குற்ற விசாரணை மன்ற ஆவணங்களலிருந்து அவை எடுக்கப்பட்டன. 1942ல் Selarang Barracksசில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.    

800 பேர் மட்டுமே தங்க வசதியிருந்த, அந்த இடத்தில் சுமார் 15000 போர்க் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டனர். தண்ணீர் விநியோகமும் அங்கு துண்டிக்கப்பட்டது.

அந்த கொடூரச் செயல்களைச் செய்ய  உத்தரவிட்ட Lieutenant Generalக்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

போரில் உயிர் பிழைத்த, சிலர் இன்றைய கண்காட்சியில் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தேசிய அரும்பொருளகத்தில் ஏப்ரல் 5ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்