Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பாரிஸ் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி: சிங்கப்பூர் வீரர்கள் நாடு திரும்பினர்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பாரிஸ் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த வீரர்கள் இன்று காலை நாடு திரும்பினர்.

இந்த ஆண்டு வீரர்கள் மூன்று பதக்கங்களை வென்றனர்.

நீச்சலில் இரண்டு தங்கப் பதக்கங்களும் "போச்சா" (Boccia) விளையாட்டில் ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன.

குடும்பத்தார், ஆதரவாளர்கள் எனச் சுமார் 100 பேர் வீரர்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் தோங்கும் (Edwin Tong) விளையாட்டாளர்களை வரவேற்க சாங்கி விமான நிலையத்திற்குச் சென்றிருந்தார்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்