லிம் தியெனுக்குக் கைதாணை
(படம்: Gaya Chandramohan)
This audio is generated by an AI tool.
வழக்கறிஞரும் எதிர்த்தரப்பு அரசியல்வாதியுமான லிம் தியெனுக்குக் (Lim Tean) கைதாணை பிறபிக்கப்பட்டுள்ளது.
அவர் தமது சிறைத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளிடம் சரணடையத் தவறியதாக லிம்மின் வழக்கறிஞரான திரு ரவி சங்கர் கூறினார்.
தகுந்தச் சான்றிதழ் இல்லாமல் சட்டச் சேவை வழங்கியதற்கு லிம்முக்கு 3 மாதம் ஒரு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அது நேற்று (3 ஆகஸ்ட்) தொடங்கவேண்டியது.
ஆனால் லிம் சொன்னபடி அரசு நீதிமன்றத்துக்கு நண்பகலுக்குள் செல்லத் தவறினார்.
அவரைத் தொடர்புக்கொள்ளவும் முடியவில்லை என்றார் திரு சங்கர்.
லிம் மருத்துவமனையில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்றார் அவர்.
migrainosus எனும் கடும் தலைவலியால் அவதிப்படும் லிம் 2 முறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.